காலேஜ் முடிச்சாச்சு, நல்ல வேலையும் கிடைச்சுடுச்சு, டீன் ஏஜ் முடிஞ்சு போச்சு , இன்னும் பாக்கி இருக்கற ஒரே கடமை கல்யாணம் தான். பத்தாததுக்கு கூட படிச்ச நண்பர்கள் கல்யாணம் , பாத்ரூம்ல தல முடி கொட்டற ஸ்பீட் , எல்லாத்தையும் பார்த்தா வயசு ஏறிகிட்டே போகுதுடா கைப்புள்ளனு மனசு அடிகடி notify பண்ணுது ..
லவ் மேரேஜா இல்ல அரேன்ஜிடு மேரேஜான்னு பட்டிமன்றம் எல்லாம் ஏற்கனவே பல G.D ல பேசி பழம் தின்னு கொட்டை போட்டாச்சு .. அதுவும் இல்லாம 'Premnath' ன்னு பேரு வச்சவுனுக்கு எல்லாம் லவ் மேரேஜ் பண்ணி வைக்கறது இல்லன்னு வீட்ல வேற ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க . ஸோ இப்போ என்னோட கன்பியூசன் ஆப் இந்தியா எல்லாம் ஹவ் எஜக்ட்லி இந்த அரேன்ஜிடு மேரேஜ் வொர்க்ஸ் ன்னு தான்..
வொர்க் ஃப்லோ இன் அரேன்ஜிடு மேரேஜ் :
--------------------------------------------------
1. பொண்ணு / மாப்பிளை போட்டோ எக்ஸ்சேஞ் . போட்டோ புடிச்சு இருந்தா தான் அடுத்த பேச்சு வார்த்தயே ..
[ இங்கதான் நம்ம ஆளுங்க Photoshop / Beauty parlour ன்னு சும்மா பின்னி பெடல் எடுப்பாங்க ]
2. ஜாதகப் பொருத்தம் , 10 க்கு 7 தான் பாஸ் மார்க் , இல்லாட்டி ரிஜெக்டெட். சில சமயம் TUESDAY தோஷம் ன்னு இஸ்யு எஸ்கலேட்
ஆகும் . அதுக்கு work around ah இன்னொரு TUESDAY தோஷம் பொண்ண தேடணும். crazy Buggers..இல்லாட்டி மறுபடியும் ரிஜெக்டெட்.
3. பொண்ணு / மாப்பிள்ளை வீட்டில இருக்கற மக்களோட கேரெக்டர் அண்ட் ப்ராபர்டீ டீடேல்ஸ் எல்லாம் பாக்கணும்.
4. மாப்பிள்ளை கல்யாண சந்தைல நல்ல விலைக்கு வந்தா வாங்கிட வேண்டியது தான். அதுலயும் இப்போ எல்லாம் ஃபாரீன் மாப்பிள்ளையோட ஷேர் வ்யால்யூ எல்லாம் எக்கச்சக்கம். நல்ல வேலை மற்றும் நல்ல சம்பளம் வாங்கினலே சந்தைல நல்ல விலைக்கு விற்பனை ஆகலாம்.
5. பெருசுங்க பேசி முடிச்சிட்டு பச்சை கொடி காட்டினத்துக்கு அப்புறம் தான் , புரிதல் படலம் ஆரம்பிக்கும்.
6. அதாவது , குடுக்கப்பட்ட 3 மாசத்துக்குள்ள ஒருத்தற ஒருத்தர் ஃபோன்ல பேசி புரிஞ்சுக்கணும். அந்த ஆயிரம் காலத்து பயிரயும் 3 மாசத்துல அறுத்து எறிஞ்சரணும். எங்க பாஷைல RAPID APPLICATION DEVELOPMENTன்னு சொல்லுவோம். இது எப்படினா ரிஸல்ட் தெரிஞ்சிக்கிட்டே எக்ஸாம் எழுதற மாதிரி. ஒருததற ஒருத்தர் புடிச்சுதான் ஆகணும்.
7. கடைசியா டும் டும் டும்.
என்னோட கேள்வி எல்லாம் ஒரு துணி எடுக்கவே அஞ்சு, ஆறு கடைல 4 மணி நேரம் செலவழிக்கற நம்ம இந்தியன் மென்டாலிட்டிக்கு , 40 வருசம் கூட வாழப்போற லைஃப் பார்ட்நர் அ எப்படி ஒரு போட்டோவா பார்த்து முடிவு பண்றாங்கன்னு தான். இப்போ கட்டாயம் புடிச்சே ஆகணும் அப்படீங்கற மனநிலையோட தான் பேச ஆரம்பிப்பாங்க.. இந்த சூழ்நிலைல எந்த அளவுக்கு உண்மைய ரெண்டு பேரும் பகிர்ந்ததுகுவாங்கன்னு சொல்ல முடியாது. ஒரு சின்ன தவறு கூட பின்னாளில் பெரிய விரிசலுக்கு வழி ஏற்படுத்தும். பொண்ணுங்க மனச புரிஞ்சுக்கறத்துக்கு கண்ணதாசன் எவ்வளவோ ட்ரை பண்ணியும் முடியல , இதுல எங்க இருந்து 3,4 மாசத்துல பேசி நம்ம புரிஞ்சுக்கறத்து !!
இப்போ ரிஸெஸ்ன்ங்கரதால கல்யாண சந்தைல நம்மல மாதிரி ஆளுங்களோடஷேர் வேல்யு வேற கம்மியா போய்ட்டு இருக்கு. ஆயிரம் தான் சொல்லுங்க, சின்ன வயசுல இருந்து எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்ச பெத்தவங்க , இதுல மட்டும் தப்பு பண்ணுவாங்களா என்ன? அரேன்ஜிடு மேரேஜ் மட்டும் இல்லாட்டி என்ன மாதிரி பல எலிஜிபல் பேச்சிலர்ஸ்க்கு எல்லாம் கல்யாணம்னு ஒரு விசயம் பகல் கனவாவே போயிடும். அப்பறம் இதயம் முரளி மாதிரி கடைசி வரைக்கும் காலேஜ் ஸ்டுடென்ட் ஆ வே இருக்க வேண்டியது தான்.
இந்த சமயம் பார்த்து T.V ல ஓடற பாட்டு
"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது ,சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும் "
என்னா டைமிங்கு !!
காலம் தான் பதில் சொல்லணும்.
நன்றி
பிரேம்.
Technorati Tags : How Arranged Marriages Work ,Arranged Vs Love Marriage