எங்க பேட்ச் ... புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.... விசித்திரம் நிறைந்த பல பேட்ஸ்மேன்களை சந்தித்து இருக்கிறது. எங்க கிரிக்கெட் டீம்மும் விசித்திரமானது அல்ல.. அதை பற்றி எழுதும் நானும் புதுமையானவன் அல்ல... IPL சந்தையில் விலை போகாத கங்குலி போன்ற ஒரு ஜீவன்தான்...


EEE நளன் அடித்த கேட்சை தவறவிட்டேன், முழங்காலுக்கு கீழ் வந்த பந்தை நழுவவிட்டேன், 12 பாலில் 5 ரன் எடுக்க வேண்டிய மேட்சை டிரா ஆக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

நளன் அடித்த கேட்சை தவறவிட்டேன், நளன் என் நண்பன் என்பதற்காக அல்ல, அதை பிடித்து இருந்தால் கை Multiple Fracture ஆகி இருக்கும் என்பதற்காக ... முழங்காலுக்கு கீழ் வந்த பந்தை நழுவவிட்டேன், பேஸிக் ஆவே நான் சோம்பேறி என்பதற்காக அல்ல, முன்ன பின்ன புடிச்சு பழக்கம் இருந்தா தான புடிக்கறத்துக்கு ... 12 பாலில் 5 ரன் எடுக்க வேண்டிய மேட்சை டிரா ஆக்கினேன், ஒப்பணிங் இறங்க வேண்டிய என்னை கடைசியில் இறக்கி விட்டதை கண்டிப்பதற்காக அல்ல, ஜெயிக்க போறோம்னு தெரிஞ்சத்துக்கு அப்பறம் ஜெயிக்கறதுல்ல அர்த்தமே இல்லனு தளபதி சொன்னதுற்காக..

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் விளையாடிய மேட்ச் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். நான் DLF maximum அடித்தது இல்லை, Karbon Kamal கேட்ச் பிடித்தது இல்லை, விளையாட்டு முழுவதும் லக்ஷ்மன் சிவராம கிரீஷ்னனின் மொக்கை commentary மட்டுமே நிறைந்து இருக்கின்றது. . கேளுங்கள் என் கதையை! அடுத்த தடவ டீம் போடறதுக்கு முன்னாடி தயவு செய்து கேளுங்கள்.


தமிழ்நாட்டிலே கோவையிலே பிரபல கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. UG ஒரு ஊர், PG ஒரு ஊர். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? வந்த இடத்தில் முதல் பேட்டிங் செய்யும் வாய்ப்பு.. சுப்பிணியும் நானும் செமி ஃபைநல் வரை கொண்டு சென்றோம்.. அப்படி வாழ்ந்த காலத்தில், திடீரென கங்குலி போல் ஃபார்ம் இழந்தவர்களில் நானும் ஒருவன்.. ஃபார்ம் இழந்து தவித்தேன் .. வீட்டை கூட்டுவது போல் ஒரே ஒரு shot மட்டும் ஆடும் கார்த்தி ஒப்பணிங் இறக்கப்பட்டான்... கல்லூரியிலும், விழாவிலும் சேர்ந்து செயல்படும் CS & IT கிரிக்கெட்டிலும் ஒன்று சேர ஆரம்பித்தது ... கடைசியில் டீமில் இருந்தே துரத்தப்பட்டேன் ..

நான் நினைத்து இருந்தால் 12th man ஆக ஒரு நாள் – அம்பயர் ஆக ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா நீங்கள் விரும்புகிறீர்கள்?

ஓப்பணிங் இறங்கி ட்ராவிட் மாதிரி விளையாடும் என்னை கடைசியில் இறங்கி அடித்து ஆட சொன்னது யார் குற்றம்.. என் குற்றமா ? அல்லது டீமில் இருந்து என்னை வெளியேற்ற நடந்த சதியா?? Wanted ஆக வந்த என்னை டீமில் எடுக்காமல், வர மாட்டேன் என்று அடம் பிடித்த பாலாஜியை டீமில் எடுத்தது யார் குற்றம்... என் குற்றமா? எப்போதும் முதல் ஓவர் வீசும் விக்னேஷ் பேட்டிங்லும் எனக்கு முன்னால் இறங்குவது யார் குற்றம்? ... என் குற்றமா ? அல்லது அப்டியே இறங்கினாலும் என்னை ரன் அவுட் செய்தானே அது யார் குற்றம் ? IT மட்டும் விளையாடிய காலங்கள் மாறி CS & IT சேர்ந்து விளையாட ஆரம்பித்தது யார் குற்றம் ?
... என் குற்றமா ?


விக்கி என்னை ரன் அவுட் செய்த காட்சி

சொந்த டீமில் சேர்க்க மறுத்தார்கள் .. ஓடினேன் ... EEE மக்கள் என்னை 'மேட்ச் விண்ணர்' என்று கிண்டல் செய்தார்கள் ... மீண்டும் ஓடினேன் ... ஃபேஸ் புக்கிலும், ஆர்க்குட்டில் போடுவதற்கு போட்டோ எடுக்க ஸ்டில் கொடுத்து போது அதை வீடியோ எடுத்து கலாய்தார்கள்... ஓடினேன் ஓடினேன், சுப்பிணி கம்ப்யூட்டரில் EA sports கிரிக்கெட் ஆவது விளையாடலாம் என்று ஓடினேன்... அங்கும் விக்னேஷ் இருந்ததால் திரும்பி வந்துவிட்டேன்... அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று டீம் எடுக்கும் சிலர்... செய்தார்களா? எடுத்தார்களா என்னை டீமில்?

இந்த மாதிரி எவளோ தான் புலம்பினாலும், கல்லூரி வாழ்க்கைல பிரிக்க முடியாத ஒரு எபிஸோட் - கிரிக்கெட்... கிரிக்கெட் விளையாடும் போது நடந்த காமெடி, மகிழ்ச்சி , வெற்றி , தோல்வி எல்லாமே இப்பொழுதும் நாங்கள் நினைத்து நினைத்து அசை போடும் மகிழ்ச்சியான தருணங்கள் ... கண்ணன் - ஆல் ரவுண்டர் , ஜெய் - மாங்கா பௌலிங், மதுர - கேப்டன்/ sketch போட்றவர் , மணி - காட்டான் எல்லாமே எப்பொழுதும் நினைத்தாலே இனிக்கும்
நிகழ்வுகள் ...

கல்லூரி இறுதி ஆண்டில் நான் [ஒரு விளம்பரம்தான் ] வெட்டி ஒட்டிய எங்களது கிரிக்கெட் தொகுப்பு ....
நன்றி,
பிரேம்.


Technorati Tags : , , , ,
Read more ...