அல்லும் பகலும்
வேலையை தவிர்த்து
வேறேதும் செய்யாது,
வீட்டிற்கும் அலுவலகத்திற்கும்
செக்குபோல் சுழலும்
வாலிப வாழ்கையின்
வசந்தமற்ற மற்றுமொரு
வழக்கமான மாலைபொழுதினில்
கதிரவன் கரைய
கார்முகில் வாய்பிளந்து
பொழிகிறது வான்
ஜன்னலோரம் நான்.
முகத்தில் அடித்தது
மழையின் சாரல்கள்
மனதை நனைத்தது
ஞாபகத் தூறல்கள்.
அனுதினமும் முகநூலில்
அளவளாவும் அன்பர்,
பின்னிரவு தாண்டியும்
அலைபேசும் நண்பரென
சுற்றமும் சூழலும்
தன்னிலை மறந்து
தத்தம் காதலியிடம்
நித்தம் கதைக்க,
நானோ தனியாக
தனிமைக்குத் துணையாக
உன்வரவை எதிர்நோக்கி
மௌனமாய் காத்திருக்க ...
காதலிக்காக கால்வலிக்க
காத்திருப்பது சுகமெனில்
காதலுக்காக காத்திருப்பது
அதனினும் சுகம்தானே ...காத்திருப்பது சுகமெனில்
காதலுக்காக காத்திருப்பது
அடக்கத்திலும் அன்பிலும்
அத்தை மகளென,
பாசத்திலும் பண்பிலும்
பால்ய சிநேகிதியென,
கனிவிலும் கண்டிப்பிலும்
கல்லூரித் தோழியென,
அழகிலும் அறிவிலும்
அலுவலக நண்பியென
பரிட்சயமான முகங்களில்
அவ்வப்பொழுது தென்பட்டு
நீதானோ என்னவளென்று
முடிவெடுக்கும் முன்னரே
மறைந்துபோகும் உன்னை
என்றாவது சந்திப்பேன்
என்னும் நம்பிக்கையில்
நிதமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கவிதையிலும் கற்பனையிலும் ...
~பிரேம்
4 comments:
அல்லும் பகலும்
வேலையை தவிர்த்து
வேறேதும் செய்யாது
நீ வீற்றிருந்தால்,
உன்னகாக ஒருவள்
உன்னகே உரியவள்
எங்கோ இருக்கிறாள்
என்று காத்திருந்தால்,
கனிவான தோழி
கண்கண்ட காதலி
விண்ணிலிருந்து வருவாள்
என்று கனவுக்கண்டால்,
கனவில் முகங்கள்
நினைவின் நிழல்கள்
என்று நிமிடங்களை
மட்டும் கரையவிட்டால்,
கிட்டும் கவிதைகளும்
சித்தரித்த கதைகளும்
உன் வலைப்பதிவின்
வாசகிகளை விசிறிகளாக்கலாம்
விசிறிகளில் காதலியை
கண்டறிய தேவை
மனம் மட்டுமன்று
முயற்சியும் தான்.
சுற்றமும் சூழலும்
தன்னிலையும் மறந்து
காதலியிடம் கதைக்கும்
நண்பர்களைக் கேட்டுப்பார்
காதலி கிடைப்பினும்
அந்த காதலை
கனிவாக காப்பது
கடினம் என்பார்கள்.
முயற்சியும் வேலையும்
அலுவலகத்தோடு நில்லாது
உறவுகளிலும் உணர்வுகளிலும்
தொடர வேண்டும்
கடமைகளோடு காதலையும்
பொறுப்புகளோடு பாசத்தையும்
கலந்து பகிரிந்து
நட்பாக வேண்டும்
தம்பி -
அவ்வாறு முதிர்ந்து
மெதுவாக மலரும்
மென்மையான காதல்
கிடைபதற்கு காலம்
கடந்தாலும், அது
கரையாமல் கலையாமல்
காலத்துக்கும் உன்னுடனிருக்கும்.
வாழுத்துக்கள்!!!
உங்கள் தேடல் சீக்கிரம் முடிந்து, Bachelor ஆன நீங்கள் பேச்சு இலர் ஆக என் வாழ்த்துக்கள் :)
@Archana, @√-1 , @மதி (GS)
Thank you :)
Beautiful writing... both by prem and archana...!
Post a Comment