டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
இதுவரை ...
இனி ...
6. Karthik talks to Jessi.
மந்தமாய் சென்றுகொண்டிருந்த அந்த செமஸ்டர் களைகட்ட துவங்கியது Secret Friends என்ற விளையாட்டு ஆரம்பித்த போதுதான் . Secret Friends -
ஏதோ ஒரு சீனியர் ஆரம்பித்து வைத்த விளையாட்டு, இன்றைக்கும் மரபு மாறாமல் தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருகிறது. விளையாட்டின் விதிமுறை என்னவெனில் எல்லாரோட பேரையும் எழுதி சீட்டு குலுக்கி போட்டு, பசங்க பொண்ணுங்க சீட்டையும், பொண்ணுங்க பசங்களோட சீட்டையும் ஆளுக்கு ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அந்த சீட்டில் இருக்கும் நபர் தான் இவருக்கு Secret Friend. இன்னார்க்கு இன்னார் தான் Secret Friend என்பது அப்போது தெரியாது. அவ்வபோது Secret Friend விளையாட்டாக செய்ய சொல்லும் செயல்களை எல்லாம் செய்ய வேண்டும். கடைசியில் ஒரு சுபயோக சுபதினத்தில் Gift வாங்கி கொடுத்து நான்தான் அந்த Secret Friend என்று பரஸ்பர அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். மரபு படி அந்த தினம் செகண்ட் இயர் Industrial Visit என்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இது ஒரு 'வாங்க பழகலாம்' விளையாட்டு. புடிச்சு இருக்கா லவ் பண்ணிக்குவோம், புடிக்கலையா கடைசி வரைக்கும் ப்ரன்ட்ஸாவே இருப்போம்.
ஒரு புறம் கடலையை/காதலை வளர்க்கும் முயற்சி என்று தோன்றினாலும்,பல்வேறு கலாச்சார பின்னணியில் இருந்த வந்த பொண்ணும் பையனும் தங்களுக்குள் இருக்கும் தயக்கத்தையும் சங்கோச்சதையும் களைந்தெறியும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்பட்டது. ஏற்கனவே தாவணி கூட்டம் அதிகம் இருப்பதால் மற்ற department புகைந்து கொண்டிருக்க, இத்தகைய விளையாட்டு அவர்களை மேலும் பொறமை அடைய வைத்தது.
Attendance ஆர்டரில் Secret Friend தேர்வு நடந்தேறிக் கொண்டிருந்தது. சீட்டை எடுத்து பெயரை பார்த்தவர்களிடம் மகிழ்ச்சி, துக்கம், வேதனை , சாதனை என பல்வேறு முகபாவனைகளை ஒரே நேரத்தில் காண அன்று சந்தர்பம் கிடைத்தது. எனக்கு எழுதி வைத்தாற்போல் ஜெஸ்ஸியின் பெயரே வந்தது. வராத பின்னே, எழுதி எடுத்துக் கொண்டுபோனதே நான் தானே. சந்தர்பத்திற்காக காத்திருப்பதை விட அதை உருவாக்குவதே வெற்றியின் அடையாளம் என்று எங்கோ படித்தது. மாத இறுதியில் Industrial Visit ஊட்டி செல்வதாக ப்ளான் போடப்பட்டது. கொடுக்கபோற கிப்ட்ல ஜெஸ்ஸி அசந்து போகணும் என்று எண்ணிக்கொண்டேன்.
"இது எல்லாம் வேலைக்கே ஆகாது மச்சி". - சீட்டை பார்த்துவிட்டு நொந்துகொண்டே சொன்னான் ஜெய். அநேகமாக அவனை வைத்து கலாய்க்கும் பெண்ணின் பெயர் வந்திருக்க கூடும். ஜெய்க்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும், வேறு வழியில்லாமல் ஒத்துகொள்ள வேண்டிய கட்டாயம்.
"உனக்கு யாரு பேருடா வந்து இருக்கு ??"
"ஜெஸ்ஸி மச்சி" ..வழக்கமான வழிதலுடன்.
"உனக்குடா" - இது விக்கியிடம்.
"மச்சி .. எனக்கு &^#$&$* பேரு வந்திருக்குடா":.மழைக்காக ஏங்கி இருக்கும் பயிரை போல சொன்னான். பாய்ஸ் ஸ்கூலில் படித்த ஏக்கம் அவன் கண்களில் தெரிந்தது.
அந்த காலகட்டத்தில் உருவானது தான் இந்த LBA - [ Last Bench Association ]. பொதுவா கடலை விசயத்தில் மாணவர்களை மூணு வகையான பிரிக்கலாம்.
அத்தகைய மூன்றாவது வகையை அதிகபட்ச உறுப்பினர்களாக கொண்ட குழு தான் இந்த LBA. பல கிளாஸ்ரூம் சீர்திருத்த கொள்கைகளை கொண்டிருந்தாலும், அதன் முக்கிய குறிக்கோள் , கடலை போடுபவர்களை கலாய்ப்பது.
- போடுவது கடலை என்பதே தெரியாமல் கடலை போடுபவர்கள்,
- தெரிந்தே கடலை போடுபவர்கள்,
- கடலை போட இயலாதவர்கள். அந்த இயலாமைக்கு அவர்கள் வைத்த கொண்ட பெயர் 'கெத்து'.
அத்தகைய மூன்றாவது வகையை அதிகபட்ச உறுப்பினர்களாக கொண்ட குழு தான் இந்த LBA. பல கிளாஸ்ரூம் சீர்திருத்த கொள்கைகளை கொண்டிருந்தாலும், அதன் முக்கிய குறிக்கோள் , கடலை போடுபவர்களை கலாய்ப்பது.
ஸ்வாரசியமாக கழிந்த நாட்கள் அவை. எப்போடா இண்டர்வல் வரும், இன்னைக்கு யாரு என்ன பண்ண போறாங்க என்று எதிர்பார்த்திருந்த தருணங்கள். அவ்வபோது கிளாஸ் நடுவில் துண்டு சீட்டில் தகவல் பரிமாற்றம் நடக்கும்.
"ஜெய் அடுத்த பீரியட் பர்ஸ்ட் பெஞ்சில் உக்காரவும்"
"விக்கிக்கு LIC லேபில் கிராப் வரைந்து தரவும். தவறினால் பைவ் ஸ்டார் வாங்கித்தரவும்."
"இன்டர்வலில் மேடை ஏறி பாடவும்".
"சிவப்பு / வெள்ளை / மஞ்சள் சுடிதாரில் பார்க்க ஆசை".
LBA தன் பங்கிற்கு பணிகளை செய்து கொண்டிருந்தது-
"முருகேசன் பொண்டாட்டி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்"
"6 மணிக்கு ஆடிடோரியம் முன்னால் சந்திக்கவும் . தீபாவளி பரிசு காத்திருகிறது"
என்று அவ்வபோது சர்ச்சைகளை உண்டு பண்ணினாலும், மகளிர் அணி சமாதானம் ஆகிவிட விளையாட்டு தொடர்ந்தது. சில நேரங்களில் சந்தர்பத்தை எனக்கு சாதகமாகவும் உபயோகித்து கொண்டேன் -
"கார்த்தியிடம் அலைபாயுதே டயலாக் சொல்லவும். இல்லாவிடில்
(Temptation)டெம்ப்டேசன் வாங்கித்தரவும்".
டெம்ப்டேசனிற்கு நடந்துகொண்டிருந்த அடிதடியில் கலந்து கொள்ள விருப்பமில்லாதவனாய், குழப்பத்தில் தத்தளித்தான். இனியும் குழம்பி பிரயோஜனமில்லை .. நேர்ல கேட்டுற வேண்டியதுதான்..மெசேஜ் தட்டினான்.
"எதுக்கு இவ்வளோ காஸ்ட்லியா ?"
"அவன் ஆயிரம் சொல்லுவான். அதுக்குனு நீயும் செஞ்சுடுவியா ? நாளைக்கு என்னோட Secret Friend அதே Temptation வேணும்னு சொன்னா காசுக்கு நான் எங்க போறது, நீயா வாங்கி கொடுப்ப ??"
"இல்ல.. உன்கிட்ட அலைபாயுதே டயலாக் சொல்ல சொன்னங்க.. சொன்னா எங்க நீ தப்பா எடுத்துகுவியோனுதான், சாக்லேட் வாங்கி குடுத்துட்டேன்". "நான் ஏன் தப்பா நெனைக்க போறேன்?"
"இல்ல .. நீ மொதல்ல மாதிரி இப்போ என்கிட்டே பேசறது இல்ல .. அன்னிக்கு பேங்க்ல பார்த்து சிரிச்சப்போ கூட நீ சுத்தமா கண்டுகல. அதான்".
"அட .. என்ன ஒரு முட்டாள் நான்.. வேற யாரையோ பார்த்து சிரித்து இருந்தாலும் இருப்பாள், என்னை பார்த்து மட்டும் இருக்காது என்று ஏன் அன்று எண்ணினேன் ... கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் , எவ்வளோ உண்மையான வரிகள்"
"ச்சே ச்சே .. அப்படி எல்லாம் இல்ல ..கவனிக்காம இருந்திருப்பேன் ..எனிவேய்ஸ் மன்னிச்சுரு .. "
"Apology Accepted :-)"
ஒற்றை வரியில் ரிப்ளை வந்தால் இது தான் பிரச்சனை. பேச்சை முடித்து விட்டாளா? இல்லையா? என்று தெரியாத இரண்டும்கெட்டான் நிலை .. 10 நிமிடத்தில் எத்தனை முறை மெசேஜ் எடுத்து பார்த்தான் என்று தெரியவில்லை .. மெசேஜ் டைப் பண்ணுவதும் டெலீட் பண்ணுவதுமாக ஒரு 10 நிமிடம். எதுவும் வரவில்லை ..
"மச்சான் Ghee rice டா .. லேட்டா போனா சிப்ஸ் இருக்காது" - ஜெய் கூப்பிட தட்டை எடுத்துக்கொண்டு ஓடினான்.
----------------------------------------------------------------------------------------
சாப்பிட்டுவிட்டு, சீனியர் ஸ்பான்சரில் ஓசி டீ குடித்துவிட்டு, பொறுமையாக ரூமிற்கு வந்தவன் வீட்டிற்கு கால் பண்ண மொபைல் எடுத்தபொழுது அந்த மெசேஜ் வந்தது
"Had dinner ????" - ஜெஸ்ஸி.
ஒரே பரவசம் .. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்துவிட்டது.
"Done. Ghee Rice. Anga?" -கார்த்தி.
"பசங்க குடுத்து வச்சவுங்க .. நல்ல நல்ல சாப்பாடா போடறாங்க .. இங்க நூட்லஸ்"
"பொண்ணுக ஹாஸ்டல்ல அது கூட நல்ல இருக்கும்னு சொன்னங்க".
"யாரு சொன்னது வாயில வைக்க முடியாது .. அவளோ கேவலமா இருக்கும்."
"எங்க சொல்றது தான் அப்படி. ஆனா எல்லாரையும் பார்த்த டெய்லி புல் மீல்ஸ் சாப்பிடுற மாதிரில இருக்கீங்க." :-)
ஹ்ம்ம் ... அப்பறம் ??
"ஹ்ம்ம்","அப்பறம்" - இதன் அர்த்தம் - உன்னிடம் பேச வேண்டும், ஆனால் பேசுவதற்கு விஷயம் ஒன்றுமில்லை. இருந்தாலும் பேச வேண்டும். பழம் பழுக்காவிட்டாலும் புகை போட்டாவது பழுக்க வைக்க யோசித்து கொண்டிருந்த கார்த்திக்கு , பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகிவிட்டது.
எதிர்த்த வீட்டு சாந்தி அக்காவின் நாயில் ஆரம்பித்த பேச்சு, ஒபாமா ஈரானின் மேல் போர் தொடுத்தது சரியா தவறா என்பதையும் தாண்டி போய் கொண்டிருந்தது..அர்த்தமற்ற பேச்சுக்கள் அதிகம் முக்கியத்துவம் அடைவது எதிர் பாலினத்திடம் மட்டும் தான் போலும். சங்கீத ஸ்வரங்கள் ஆரம்பித்துவிட்டன. 100 மெசேஜ் தாண்டியதும் காசை பிடுங்கும் ஏர்டெல் தான் கார்த்தியின் தற்போதைய ஒரே எதிரி. அன்றைய காதலர்களின் ஒரே எதிரியும் கூட.
நட்பு யாருக்கும் தெரியாமல் செல்லிடபேசியில் வளர்ந்து கொண்டிருந்தது. காலெண்டரில் அன்றைய தேதி கிழிக்கும் போது தான் ஞாபகம் வந்தது..அதுக்குள்ளையும் 29 ஆயுடுச்சா. இன்னும் கிப்ட் வாங்கவே இல்லையே. கொடுக்கப்போற கிப்ட்ல ஜெஸ்ஸி அசந்து போகணும். கிழித்த அவசரத்தில் அதில் எழுதிருந்த பழமொழியை வாசிக்காமல் காலேஜ் புறப்பட்டு சென்றான்.
அதில் எழுதியிருந்தது ,
"தான் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார்."
"தான் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார்."