டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
5. Jessi is driving me Crazy
அந்த ராக்கி கட்டப்பட்ட கைகளுக்கு சொந்தக்காரன்,எனக்கு அருகில் அமர்ந்து இருக்கும் ஜெகநாதன் என்று நீங்கள் யூகித்து இருந்தால், பாராட்டப்பட வேண்டிய வாசகர்கள்தான். இன்றைய சமூக சூழலில் ராக்கி கட்டுதல் ஒரு தற்காப்பு கலையாகவே மாறிவிட்டது. நல்ல வேளை கைக்கு வந்தது, அடுத்தவன் கையோட போச்சு.
ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த செகண்ட் செமஸ்டர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போ தான், யார் யார்க்கு எந்த எந்த பேப்பர்ல போகும் என பசங்களும், பத்து மார்க் கொஸ்டின் மாத்தி எழுதியதற்காக பொண்ணுங்களும் பீல் பண்ணிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு அதுக்குள்ளையும் ஒரு மாசம் ஓடிருச்சா ? செமஸ்டர் லீவ் முடிந்து திரும்பிய கார்த்தியால் நம்ப முடியவில்லை.
பர்ஸ்ட் இயர்கும் செகண்ட் இயர்க்கும் தான் எவ்வளோ மாற்றங்கள், வித்தியாசங்கள், ஏற்றதாழ்வுகள். தாத்தாவின் கட்டுபாடுகள் அற்ற வாழ்கை, பிரைவேட் மெஸ்ஸில் இருந்து விடுதலை, சீனியர் என்ற கர்வம், இவ்வாறு பல எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, 'பவானி' - ரூம் நம்பர் 222 நோக்கி நடந்தான்.ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த செகண்ட் செமஸ்டர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போ தான், யார் யார்க்கு எந்த எந்த பேப்பர்ல போகும் என பசங்களும், பத்து மார்க் கொஸ்டின் மாத்தி எழுதியதற்காக பொண்ணுங்களும் பீல் பண்ணிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு அதுக்குள்ளையும் ஒரு மாசம் ஓடிருச்சா ? செமஸ்டர் லீவ் முடிந்து திரும்பிய கார்த்தியால் நம்ப முடியவில்லை.
Bhavani - 2nd year hostel. Pic Courtesy - Pradeep Palakad. |
லோகேஷிற்கும், விஜய்க்கும் முதல் முறையாக மீசை மழிக்கும் சடங்கு வலுகட்டாயமாக ஒருபுறம் நடந்தேறிக் கொண்டிருக்க, மறுபுறம் பிரைவேட் பிடியில் சிக்கி ருசியை மறந்த எங்கள் நாவிற்கு ஒரே வரப்ரசாதம் -சிப்ஸ் உடன் கூடிய Ghee rice என்று அழைக்கப்படும் நெய் சாதம் கவர்மன்ட் மெஸ்ஸில் தயாராகி கொண்டிருந்தது. எல்லாம் மாறி இருந்தது. இரண்டை தவிர
- அதே சுத்தம் செய்யப்படாத கழிவறைகள்.
- அதே ரூம்மேட்ஸ்.
"நம்ம முருகனோடது மச்சான், பயபுள்ள குளிச்சுட்டு இருக்கான். அதான் கேம் விளையாடிட்டு இருக்கோம்." - ஜெய்.
அந்த ஓட்ட மொபைல்ல அப்படி என்னத்த இத்தனை பேரும் சேர்ந்து ஆர்வமா விளையடரானுங்க, சந்தேகத்தோடு சபையில் அமர்ந்தேன்.
"ஐ லவ் யு" என்று டைப் செய்து நம்பர் என்ட்டர் செய்தான்.
டேய் இது நம்ம கிளாஸ் பொண்ணு நம்பர் ஆச்சே?? மவனே மாட்டினோம், சங்கு தான்.
"சும்மா விளையாட்டுக்கு தான் மச்சி."
உனக்கு எல்லாமே விளையாட்டுதான்.
"பொண்ணு நம்ம EEE பையனோட ஸ்கூல் தான். தெரிஞ்ச பொண்ணுதான். பிரச்சனை எல்லாம் ஆகாது." சமாதனம் சொன்னான் ஜெய்.
"நீ எப்போடா ஊர்ல இருந்து வந்த?" ஈரம் சொட்ட சொட்ட இடுப்பில் துண்டோடு வந்தான் முருகன்.
"அவன் வந்தது இருக்கட்டும், உனக்கு ஏதோ கால் வருது மச்சி"- ஜெய்.
"இவ எதுக்குடா எனக்கு கால் பண்றா ?? ஹலோ . ஹ்ம்ம் சொல்லு"
*&#@&#*@%$
"இல்ல.."
!@#$#$@#%@#
"அது வந்து.. நான்"
*#&@$@#&#$
"இல்ல".
---------- The number you are trying to reach is currently switched off.
"எவண்டா மெசேஜ் அனுப்பினது? எந்த *@#&!$# அனுப்பினது ??"
சமாதனம் பண்ணுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு. பின்னர் கிளாஸ்மேட்டை அனுப்பி அவளையும் சமாதனம் செய்து பிரச்சனை முடிவிற்கு வந்தாலும், அவ்வபோது கிடைக்கிற மொபைல்ல இருந்து கிடைக்கற நம்பர்க்கு அந்த மூன்றெழுத்து மெசேஜ் அனுப்புற பழக்கம் மட்டும் ஓய்ந்த பாடில்லை. பொண்ணுங்களும் இதுங்க திருந்தாத ஜென்மம்னு பெருசா எடுத்துக்கறது கிடையாது.
என்னோட மொபைல்ல இருந்து இப்படி ஒரு மெசேஜ் எவனாச்சும் ஜெஸ்ஸிக்கு அனுப்பமட்டனான்னு ஏங்கிய காலங்கள் எல்லாம் உண்டு. ஜெஸ்ஸி மேல இருக்கற பயமா, இல்ல எங்க எனக்கு செட் ஆயிடுமோ அப்டிங்கற நல்ல எண்ணமா தெரில, ஒருத்தனும் அனுப்ப மாட்டான்.
ஜெஸ்ஸின்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது. பார்த்து 1 மாசம் ஆச்சு. சீக்கிரம் குளிச்சுட்டு திருநீர் சகிதம் ரெடி ஆகி தேவதையின் தரிசனம் காண கிளாஸ் கிளம்பினேன். வழக்கம் போல் பின்னணி இசையுடன் நுழைந்தாள் என்னவள்.
"ஜெஸ்ஸி கொஞ்சம் சதை போட்டு இருக்கால" சும்மா இல்லாத என் வாய் ஜெய்யிடம் உளறியது.
"நீ ஏன் அவள பத்தியே பேசற.. உன்னோட போக்கு சரி இல்லையே. விளையாட்டுக்கு ஓட்றத எல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்காத மச்சி .. பியுச்சர்ல பீல் பண்ணுவ"
"இல்ல மச்சான்.. செம் லீவ்ல எனக்கு குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் எல்லாம் அனுபிச்சாடா"
"உனக்கு மட்டும் இல்ல, நம்ம கிளாஸ்ல இருக்கிற எல்லாத்துக்கும் தான் அனுப்பி இருக்கா. ஓவரா பீல் பண்றத விட்டுட்டு கிளாஸ்ஸ கவனிக்கற மாதிரி நடி. இல்லாட்டி வெங்கி தாத்தா வெளியில அனுப்பிடுவாரு. ஏற்கனவே அட்டன்டன்ஸ் கம்மி. "
எவளோ நாள் தான் பேசாம பார்த்துகிட்டே இருக்கறது.காதலில் காத்திருப்பது சுகம் தான் என்றாலும் ஒரு தலை காதலில் அது வேதனையாகவே தெரிந்தது. எப்படி பேச்சை ஆரம்பிகிறது, என்னத்த பேசறது ? விருப்பப்படும் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பேச நேர்ந்து விடுகிறது. சாமர்த்தியசாலி சந்தர்பத்தை காதலாய் மாற்றுகிறான், ஏமாந்தவன் அண்ணனாகவோ, ரீசார்ஜ், செய்யும் நண்பனாகவோ மாறுகிறான். இது இரு பாலருக்கும் பொருந்தும். அத்தகைய சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன்.. அது வெகு தொலைவில் இல்லையென்பது வரும் நாட்களில் தெரிந்தது ..
தொடரும்..
Technorati Tags : College , Friends , Fun , story , Happy Days , Admission