டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
 
இதுவரை ...

2.கார்த்திக் மீட்ஸ் ஜெஸ்ஸி

இனி ...


3. KARTHICK TALKS TO JESSI 

ஹாஸ்டல் முழுவதும் அன்னிக்கு ஜெஸ்ஸி பத்தின பேச்சுதான். ஒட்டு மொத்த டிபார்ட்மென்ட் பசங்களோட முழு ஆதரவோடு, ஒரு மனதா டாப் 10 தர வரிசைல ஒரு பொண்ணு முதல் இடம் பிடிக்கறது அநேகமா காலேஜ் வரலாறுல இது தான் முதல் முறை.

"எப்படி மச்சி ..  டாப் 10ல மொத ஆளு .. நம்ம டிபார்ட்மென்ட் பொண்ணு ..  மெக்கானிகல் பசங்க எல்லாம் I . Tயே எடுத்து இருக்கலாம்னு பொலம்பராணுங்க ...செம கெத்துல" - ஜெஸ்ஸி புகழ் பாடினான் கார்த்தி.

"ஏன்டா .. அவ நேத்து உட்ட பீட்டருக்கே எதாச்சும் பண்ணி இருக்கனும் .. இப்போ இப்படி வேற ஏத்தி விட்டோம், அப்புறம் அவள கைலையே  புடிக்க முடியாது. மச்சி, பொண்ணுங்கள அதிகமா ஆட விட்டா நமக்கு தான் பிரச்சனை ... " - ஜெய்.

"இவன் யோசிக்கிற விதமே சரி இல்லையே ... நாம ஜெஸ்ஸிய ரூட் விடற விசயத்த சொன்னா மௌனம் பேசியதே சூர்யா மாதிரி எதாச்சும் பண்ணினாலும் பண்ணுவான்... எதுக்கும் உஷாரா இருக்கறதுதான்  நமக்கும் நல்லது ...நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சி ... எதாச்சும் பண்ணனும் ...  சரிடா தூக்கம் வருது... நான் தூங்கறேன்"  .... ஒருவாறாக பேச்சை முடித்துக்கொண்டு தூங்கச் சென்றான்.

இன்னிக்கு ஜெஸ்ஸிகிட்ட எப்படியாச்சும் பேசறோம். ப்ரண்டு ஆகறோம் .. "என்னடா ...கூப்பிட்டியா ..  ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு ?? " - ஜெய்.
நம்ம ஜெஸ்ஸிய பத்தி யோசிச்சாலே இவனுக்கு மூக்கு வேர்க்குதே  ....

"நான் எதுவும் சொல்லலையே மச்சி... லேட் ஆச்சு .. வா கிளம்பலாம்" .


முதல் நாள் தாமதமாக வந்ததன் புண்ணியமோ என்னவோ, பெண்களுக்கு பின்னால், முக்கியமாக ஜெஸ்ஸிக்கு பின்னால் இருந்த இருக்கை நிரந்தரமாக எங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.. 

எப்படி பேச்சை ஆரம்பிகிறது ?? நமக்கு தெரிஞ்ச ஒரே டெக்கினிக் பென்சிலையோ லப்பைரையோ கீழ போட்டுட்டு " ஏய் கேர்ள், டேக் தட் பென்சில் அண்ட் கிவ் நோ" தான்..  இத வச்சு அந்த வடக்கு தெரு வித்யாவ  வேணா ஏமாத்தலாம்.. நம்ம ஆளு பீட்டர் ஆச்சே ... பத்தாததுக்கு ஜெய் வேற பக்கதுல இருக்கான்.. இவன வச்சுகிட்டு பேசறது , அவளை ராக்கி கட்ட சொல்றது ரெண்டும் ஒன்னுதான்.

என்ன ஷாம்பூ, என்ன பெர்பியும் என்று ஆராய்வதிலேயே மொக்கையாக பொழுது கழிந்து கொண்டு இருந்த வேளையில் அந்த இன்ப அதிர்ச்சி நிகழ்ந்தது. ஆம், ப்ராடிகல்ஸ் லேப் பேட்ச் பிரிக்கப்பட்டது ..அதுவும் ரிஜிஸ்டர் வரிசையில் ..

பிசிக்ஸ் லேப் - கோகுல், ஜெய் , ஜெஸ்ஸி , கார்த்திக் , கயல் .

மேலும் இன்ப அதிர்ச்சி ..

கெமிஸ்ட்ரி லேப் - ஜெஸ்ஸி , கார்த்திக் . :-)

அருகில் பீட்டர் மறைத்து வைத்து வாசித்து கொண்டிருந்த அந்த ஆங்கில நாவலின் வாசகம் எதேச்சையாக கார்த்திக் கண்ணில் பட்டது .. 

        "GOD HAS A PLAN FOR EVERYONE"  

கடவுளை நம்பாதவனாக  இருந்தாலும் கார்த்திக்கு அந்த வரிகள் பிடித்துப்போய்தான் இருந்தது ..


முதல் லேப் கிளாஸ் என்பதால் வெறும் ரெகார்ட் எழுதுதல் மட்டுமே அன்றைய நிகழ்வாக இருந்தது. ஜெஸ்ஸியின் கையெழுத்தும் அவளை போன்றே அழகாக இருந்தது என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இதற்கு மேலும் மௌனம் கூடாது என்றெண்ணி பேச்சை ஆரம்பித்தான் கார்த்திக். 


"உங்க முழு பேரே கயல் தானா இல்ல கண்களுக்கு மட்டுமா ?? " - சுஜாதாவின் வசனத்தை அடித்துவிட்டான்..கயல் முறைக்க, ஜெஸ்ஸியோ சிரித்தாள் .."வெரி ஹியுமரஸ்".சிட்னி ஷெல்டன் வாசிப்பவள், சுஜாதாவை வாசித்திருக்க வாய்ப்புகள் கம்மி தான்.. அப்போ அடிகடி யூஸ் பண்ணிக்கலாம். பாராட்டு பெற்ற பெருமிதத்தோடு ஜெய்ய பார்க்க, அவனோ  "எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு" என்று கேட்பது போல தோன்றியது ..


பிசிக்ஸ் லேப்பில் தான் ஜெய் கூடவே இருந்து சாவடிக்கிறான், கெமிஸ்ட்ரி லேப்லயாச்சும் அப்படி இப்படின்னு எதாச்சும் கெமிஸ்ட்ரி உருவாகும் என்று எதிர்பார்த்தான் கார்த்திக். அவளோ எக்ஸ்பெரிமென்ட் செய்வதிலேயே தீவிரமாக இருந்தாள்... எவ்வளோ பண்ணினாலும் கடைசில பக்கத்துக்கு பேட்ச்ல கேட்டுதான ரிசல்ட் எழுதுவா .. அவ்வப்போது பேசினாலும் "பென்சில்", "ரப்பர்", "பிப்பெட்" , "ப்யுரட்" , "ரெகார்ட்" , "கிராப்"  என்ற அளவிலேயே நாட்கள் நகர்ந்தன.. 


முதன் முதலாக அவளிடம் பேசிய அந்த வார்த்தைகள் இப்பவும் ஞாபகம் இருக்கு ..


"உன்னோட ஸ்கூல்மேட் IBT பிரவீன் உன்னோட மெயில் ஐடி கேட்டான்".
"தர முடியாதுன்னு போய் சொல்லு போ" , என்று அசிங்கபட்டதில் இருந்து ஜாஸ்தி பேச முற்படுவதில்லை. அவளது செயலையும், அழகையும் ரசிப்பதோடு சரி .. 


பூவோடு சேர்ந்து மணக்கும் நாரை போல , "ஜெஸ்ஸியின் பேட்ச்மேட்" என்ற ஒரே காரணத்தால் பலராலும் அடையாளம் காணப்பட்டான் கார்த்திக்.. காணப்பட்டான் என்பதைவிட அனைவரின் வயிற்றெறிச்சலை வாங்கி கட்டிக்கொண்டான் என்பதே உண்மை.


EEE பிளாக் வாசலில் அனாதையாக இருந்த "வாட்டர் டாக்டர்" I.T வாசலுக்கு மாற்றப்பட்ட பின்னர், சேவல்களின் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது .. வந்தவர்களிடம் தாகத்தை விட ஜெஸ்ஸியின் தாக்கமே மேலோங்கி இருந்தது. இப்படியே போச்சுனா எவனாச்சும் ஒருத்தன் என்னிக்காவது ஒருநாள் ப்ரொபோஸ் பண்ணி தொலைக்க  போறான்.. இவளும் ஓகே சொல்லிட்டானா ? ..நெவெர், எதுல வேணாலும் பொறுமையா இருக்கலாம், ஆனா லவ் சொல்றதுல மட்டும் இருக்க கூடாது ..  ஈவினிங் கிளாஸ் முடிஞ்ச உடனே சொல்லிட வேண்டியதுதான் ..சரியான சந்தர்பம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில், நடந்த அந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்தது..


நிகழப்போகும் விபரீதம் தெரியாமல், ஜெகநாதன் ஜெஸ்ஸியிடம் கூறிய அந்த வார்த்தைகள் !!!

"ஜெஸ்ஸி ..."

"ஓடிப்போலாமா ???" 
                                                                                           தொடரும் ...


Technorati Tags :  ,     , 
Read more ...