பதிவு எழுதி பல நாட்கள் ஆச்சு... ஏதாச்சும் எழுதணும்.. ஆனா என்ன எழுதறதுனு தான் ஒரே குழப்பம்... சரி வழக்கம் போல கல்லூரி வாழ்க்கை பத்தி ஏதாச்சும் மொக்கை போடலாம்னு பார்த்தா நம்ம நண்பர்கள் அது ஒன்ன மட்டும் தான் வச்சு நான் கடைய நடத்துரதா ஊருக்குள்ள கிளப்பி விட்டுட்டு இருக்கானுங்க... நீண்ட நாட்களாக கவிதை எழுத வேண்டும் என்ற ஒரு விபரீத ஆசை வேற... பல வருடங்களா எல்லா மனப்பாட செய்யுளுக்கும் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ,இது ஒன்ன மட்டும் வச்சு சமாளிச்ச ஆளு நம்ம.. இதுல பல இரவுகள் மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்து தூக்கம் வந்ததே தவிர கவிதை மட்டும் வந்த மாதிரி தெரில... இருந்தாலும் பல முயற்சிகள் செய்து கவிதை மாதிரி ஒண்ணு எழுதி, நெனச்ச இடத்துல ENTER அடிச்சு ஒரு கவிதை ஃபீல் கொண்டு வர ட்ரை பண்ணி எழுதி வச்சேன்... தமிழ ஏற்கனவே எல்லாரும் கொலை பண்றது போதும், நம்மளும் எதுக்கு பண்ணிக்கிட்டுனு, எல்லாத்தையும் ஓரம் கட்டி வச்சுட்டு பொழப்ப பார்க்க போயாச்சு..நேத்து தான் "வானம்" படத்தோட பாட்டு கேட்க நேர்ந்தது..

அதுல லிட்டில் யங் சூப்பர் ஸ்டார் சிம்புவின் வரிகளுக்கு, யுவனின் இசை...

"ஏவன்டி உன்னை பெத்தான்,அவன் கைல கிடைச்சா செத்தான்.
ஏவன்டி உன்னை பெத்தான்,அவன் கைல கிடைச்சா செத்தான்.
ஏவன்டி உன்னை பெத்தான்,அவன் கைல கிடைச்சா செத்தான்.
ஏவன்டி உன்னை பெத்தான்,அவன் கைல கிடைச்சா செத்தான். "


அப்டியே என்னோடத படிச்சு பார்த்தேன்... மேல இருக்கறத்துக்கு நம்ம எழுத்து பன்மடங்கு பரவாயில்லைனு தோணுச்சு... அதன் விளைவே பின்வரும் எனது படைப்பு...


முதல் முயற்சி.. பிழை இருப்பின் மன்னிதருளவும்..




அன்னம் இட்ட அன்னையிடத்தில்
வராத கண்ணீர்
உன்னிடத்தில் வந்தது ஏனோ?

என்னவளின் இதழ் சுவையை விட
உன் சுவை
கண்ட நாள் முதலே
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் ஏராளம்.

உன்னால்தான் என்னுள்
எத்தனை வேதியல் மாற்றங்கள்
நடுநிசிகளில்
விழிக்க வைத்தாய்
அதிகாலை பகலவனை
பலமுறை காண வைத்தாய்

வாசிப்பவர்கள் நினைப்பார்கள்
கவிதைக்குக் காரணம்
காதல் என்று..

எனக்கு அல்லவா தெரியும்
காரம் என்று..


ஆந்திரா மெஸ்...



--பிரேம்


Read more ...