4 வருட கல்லூரி வாழ்க்கையில், எவ்வளோ தான் மறக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்து இருந்தாலும், சரக்கு அடிக்கும் இடத்தில் உண்டாகும் சுவையான சம்பவங்களை இப்போது எண்ணி பார்த்தாலும் ரசிக்கும் படியாகவே இருக்கும்.. முதல் குடி, பரம குடி,ஓசி குடி, பியர் பார்ட்டி, ஸைட் டிஷ் கூட்டம், மிக்ஸிங் பார்ட்டி, சீன் பார்ட்டி,ஆஃப் பாய்ல் பார்ட்டி என்று குணத்தால் வேறுபட்டாலும் சரக்கு என்று வரும்பொழுது அனைத்து குடிமகன்களும் ஒன்றாக சபையில் அமர்ந்து, காட்டும் ஒற்றுமைக்கு ஈடு இணை கிடையாது.. அதுலயும் ரெண்டு நாளைக்கு முன்னாடி ரோட்ல அடிச்சிக்கிட்டு கிடந்தது எல்லாம் மாமா மச்சான்னு கூடி பரஸ்பரம் கொண்டாடிக்குவானுங்க..ஸவர்ஸ் பார் (அதாங்க எங்க காலேஜ் குடிமகன்களின் ஒரே கோவில்), தந்தூரி சிக்கன், கோல்ட் ஃப்லேக் சிகரெட்டில் தொடங்கி மாத கடைசியானால் டாஸ்மாக், ஊறுகாய் பாக்கெட், காஜா பீடி வைத்து அட்ஜஸ்ட் செய்யப்படுமே தவிர இதுவரை நிறுத்த பட்டதாக சரித்திரம் இல்லை. எதற்கு கேட்டாலும் இல்லாத காசு சரக்கு என்று வரும் போது மட்டும் எங்கே இருந்து தான் வரும்னு தெரியாது...படித்த 4 ஆண்டுகளில் என்னை சுற்றி நடந்த, நான் பார்த்த, உடன் இருந்து ரசித்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன். மேலும் வீட்டிற்கு ஆட்டோ வரலாம் என்ற பயத்தினாலும், அடுத்த பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போது முகத்தில் பேண்டேஜ் ஒட்டும் அபாயம் மிகவும் பிரகாசமாக தெரிவதாலும், பொது நலம் கருதி நண்பர்கள் பெயரை வெளியிடாமல் தொடர்கிறேன்.
டிஸ்கி: குடி குடியை கெடுக்கும். மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு.
காலம்: முதல் ஆண்டு இடம்: பொன்னையாறு விடுதி
கல்லூரி தொடங்கிய ஆரம்ப காலம், அதிகம் பேசி பழகாத காரணத்தால் எந்த பூனை பால் குடிக்கும் என்று தெரிய வாய்ப்பு இல்லாமலே போய் விட்டது. முதல் ஆண்டு என்பதால் ராக்கிங் காரணமாக இருந்த கண்டிப்புகளுக்கு நடுவே சரக்கு பரிமாற்றம் மிகவும் கடினமான விசயமாக இருந்து வந்தது... அப்போது தான் கெத்து கேங் என்று எல்லராலும் பரவலாக அறியப்பட்ட சிலர் முதல் முறையாக சரக்கு அடித்ததாக செய்தி பரவியது.. அதில் நம்ம நண்பர் ஒருத்தர் நல்லா சரக்கு அடிச்சுட்டு ஓ ஓ என்று சவுண்டு போட்டு பொலம்பியதாக வதந்தி..அதுவரை அவன் ஒருவனை தவிர அனைவரும் சொம்பாகவே இருந்தோம்..பின் வந்த நாட்களில் தான் மேலும் மூவர் பள்ளி நாட்களிலேயே சரக்கு அடித்து இருப்பது தெரிய வந்தது.. இருப்பினும் சபை இல்லாத காரணத்தால் சரக்கு விசயத்தில் முதல் ஆண்டு மொக்கையாகவே கழிந்தது என்று சொல்லலாம்.
காலம்: இரண்டாம் ஆண்டு இடம்: ஸவர்ஸ் பார்
எங்கள் வகுப்பு பல குடிமகன்களை கண்டது.. நண்பர் ஒருவரை வழக்கம் போல ஏத்தி விட்டு அரியர் பேப்பர் க்ளியர் பண்ணினதற்கு ஸவர்ஸ் பாரில் ட்ரீட் வைக்க சொல்ல, அவரும் ஓகே சொல்லிவிட்டார்.. ட்ரீட் வைத்த நண்பனையும் சேர்த்து புது முகங்கள் 3 பேர் , மேலே சொல்ல பட்ட 4 பேர், அப்புறம் ஸைட் டிஷ்க்கு 8 பேர்னு ஒரு கூட்டமே கிளம்பினோம்.. முதல் முறையாக பாருக்குள் நுழையப் போகிறோம் என்கிற உற்சாகமும், பயமும் எங்கள் முகத்தில் தெரிந்தது...
"கொஞ்சமா டேஸ்ட் பாரு மச்சி.. லைட்டா கசக்கும்.. புடிச்சு இருந்தா குடி.. இல்லாட்டி கம்ப்பெல் பண்ண மாட்டேன்" .. ஃபர்ஸ்ட் டைம் குடிமகன்களுக்கு வழங்கப்படும் அறிவுரை, பெரும்பாலும் மிக்ஸிங் பார்ட்டியிடம் இருந்தே வரும்.. அங்கும் அதே தான் நடந்தது...
முதல் முறையா ட்ரை பண்ணும் நண்பர்கள் பியர் ஆர்டர் பண்ண, நடு நிலை/உயர் நிலை குடிமகன்கள் ஏளனப் பார்வையுடன் ஹாட் ஆர்டர் செய்ய, நாங்கள் ஸைட் டிஷ்காக காத்திருந்தோம். நண்பர் பீரின் கசப்பு தன்மை பிடிக்காமல் நேரடியாக ஹாட்க்கு தாவினார்.. பின்பு தான் தெரிந்தது ஸைட் டிஷ் லிமிடெட் என்றும் அது சரக்கு அடிப்பவர்களுக்கே பத்தாது என்றும்.. தந்தூரியை எதிர் பார்த்து வந்த எங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமும் மீதி பொரியும் தான்.. அதையும் சரக்கு கூட்டம் மேய்ந்து கொண்டு இருந்தது.. நண்பர் போதயில் பொரியை அள்ளி நெஞ்சில் போட்டு கொண்டு இருந்தார், கேட்டதற்கு தனது வாய் அங்கே இருப்பதாக நினைத்தாராம். :-) அவரை ஹாஸ்டலில் விட சென்ற மிக்ஸிங் நண்பர் திரும்பி வரும் வழியில் போலீஸ் ஸ்டேசன் முன்னாடியே ஆக்ஸிடெண்ட் ஆகி விழ, வண்டியை அங்கயே விட்டு விட்டு பாருக்குள் வந்து விட்டார்.. எப்படி வண்டியை திரும்பி மீட்டார்ன்னு தனி பதிவே போடலாம்..
காலம்: மூன்றாம் ஆண்டு இடம்: ஹாலீவுட் பார்
தண்ணி அடிக்கும் பழக்கம் வெகுவாக குறைத்ததற்கு, Placement இல் காட்டிய அக்கறைய விட பாலாஜியன் கோபத்திற்கு ஆள் ஆகி விட கூடாதே என்பதுதான் காரணம். பொருத்தது போதும்னு முடிவு பண்ணி, ஒரு 6 பேர் கொண்ட குழு புது முயற்சியாக ரயில்வே ஸ்டேஷண் எதிரில் இருக்கும் ஹாலீவுட் பார் வரைக்கும் சென்று சரக்கு அடித்தனர். குழு தலைவர் கொஞ்சம் ஓவரா போனதால், அங்கயே ஆம்லெட் போட்டு, பஸ்ல கைதாங்கலா கூட்டிட்டு வந்து, சைக்கிள் ல வச்சு, தரைல தவழ்ந்து ஒரு வழியா ஹாஸ்டல் வந்து சேர்ந்தார். அன்று முதல் உருவானது தான் இந்த ஹாலீவுட் ஸ்குவாட்..
காலம்: இறுதி ஆண்டு இடம்: வெள்ளாரு விடுதி
மறக்க முடியாது வருசம். வருசத்துக்கு 2 இல்லாட்டி 3னு சரக்கு அடிச்சுட்டு இருந்த காலம் போய் கிடைக்கும் போது எல்லாம் சரக்கு அடிக்க ஆரம்பிச்ச வருசம். நீண்ட நாள் கழித்து Place ஆன நண்பன் வைத்த பார்ட்டி வரலாறு காணாத ஒன்று. இது வரை CSE தனியா IT தனியா சரக்கு அடித்த பழக்கம் போய் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று கூடி ஒற்றுமைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்றால் அது மிகையாகாது. என் போன்ற ஸைட் டிஸ் வாசிகளும் வருத்த படாமல் இருக்க தந்தூரி சிக்கன் எல்லாம் வாங்கி வந்தது தனி சிறப்பு.. சில புது முகங்களும் அறிமுகம் ஆனது அதில் தான்.
நினைவில் நின்றவை
- குடிமகன்களுக்கு சரக்கு அடிக்கும் போது இன்பம் என்றால், எங்களுக்கு சரக்கு முடிந்தவுடன் அவர்கள் ஆற்றும் சொற்பொழிவை கேட்பதில் கூடுதல் இன்பம். அதிலும் காமெடி நண்பரின் சொற்பொழிவு என்றால் கேட்கவே வேண்டாம். வீடியோ கேமரா சகிதம் கூட்டம் நிரம்பி விடும். அவர் பண்ணும் சேஷடை ரசிக்கும் படியாகவே இருக்கும். போதையின் உச்சத்தில் இருந்தாலும் குறிப்பிட்ட பெயரை சொன்னவுடன் வெட்கததில் சிரிக்கும் அந்த சிரிப்பு ,, மற்றவர்களை உதைப்பதற்கு காலைத் தூக்கி தானே கீழே விழும் புத்திசாலித்தனம்,, எவளோ தான் அடிச்சாலும் காலைல டான்னு 6.30கு எல்லாம் எந்திரிச்சுருவார்.. உச்சக்கட்ட போதையில் இருந்த போதும் தெளிவாக வாக்குமூலம் கொடுத்தது மட்டும் இல்லாமல் "மாற்றான் மனைவி மன்றத்து குமரி" என்று வீர வசனம் பேசியவர். இதுவரைக்கும் இவர் ஆம்லெட் போட்டு நான் பார்த்தது இல்லை..
- சரக்கு அடித்தவுடன் எப்படிதான் தோனும்னு தெரியாது, கரெக்ட்ஆ பாட்டு நண்பரின் ரூம் கதவ தட்திடுவாங்க. ஒரு தடவை தான் னு நெனச்சு அவரும் பாட, அதுவே பழக்கம் ஆனது தான் மிச்சம்.. பாட்டு நண்பர் தன்னால் முடிந்த அளவு மிரட்டியும், கெஞ்சியும் கடைசியாக அழுதும் பார்த்த பிறகு தான் விட்டு இருக்கிறார்கள்.
- இடியே விழுந்தாலும் பியர் தவிர வேற எதையும் தொட மாட்டேன்னு ஒரு கூட்டம் இருக்கும்.. அவர்கள் எதனால இந்த முடிவுக்கு வராங்கன்னு தெளிவா தெரியல. கடைசியா பியர் நண்பர் 2 பாடல் பியர் உள்ள தள்ளி 2 நாலா அவதி பட்டு இனிமேல் பியர் அடிக்க மாட்டேன்ங்கற முடிவுக்கு வந்ததா ஞாபகம்.
- ஸ்டெப் நண்பர் மத்தவுங்க காசுல தான் சரக்கு அடிக்கணும்னு ஒரு கொள்கையோட வாழ்பவர். இது நாள் வரை பாட்டம் ஸிப் அடிப்பதாக சொல்லி வருகிறாரே தவிர அவருக்கு யாரும் பியர் வாங்கி தர முன்வருவதில்லை. :-)
- CSE நண்பர்களான தமாசு போதையில் நாய்க்கு பொது மாத்து போட்ட நிகழ்வும் , மணல் நண்பர் பாத்ரூம் சென்று விட்டு அங்கயே தூங்கிவிட 2 மணி நேரம் கழித்து கண்டுபிடிக்க பட்டதும் இப்போதும் மறக்கமுடியாத ஒன்று.
- கோவா சுற்றுலாவின் போது ஒரு ஸிப் பியர் சுவைத்து பார்த்து விட்டு, குற்ற உணர்ச்சியல் கூனி குறுகி இடிந்து போய் அமர்ந்த நண்பர் தற்போது வாரா வாரம் அடிச்சு தூள் கிளப்பரத்தா செய்தி.
இவளோ எழுதிட்டு, எங்கள் தல பரம குடி பத்தி எதுவும் எழுததாட்டி தல கோச்சிகுவார்.. இருந்தாலும் தவறாக எழுதி விட்டால் "அட்சு மூஞ்ச ஒடசுடுவார்" ங்கற காரணத்தால் இதோட முடிச்சுகிறேன்.
நன்றி,
பிரேம்.