டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
 
இதுவரை ...

1. கோவை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது !!

இனி ...

2. கார்த்திக் மீட்ஸ் ஜெஸ்ஸி
   _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

மாலைபொழுது ஜெய்யோடும், விக்கியோடும் அரட்டையில் கழிந்தது. ஜெய்  அதிகமாக "மச்சான்" பயன்படுத்துவதை கவனித்தான் கார்த்திக். பக்கத்துக்கு ரூமிலும் I.T பசங்கதான் என்ற விவரமறிந்து காண சென்றனர். உள்ளே பிரேம் தனக்கு ஸ்கூலில் பெண்கள் எழுதிய 'slam book' ஐ பாலசுப்ரமணியிடம் காட்டி சீன் போட்டு கொண்டிருந்தான். அவர்களிடம் சிறிதுநேரம் மொக்கை போட்டுவிட்டு, மொட்டை மாடியில் மற்றொரு மொக்கை கூட்டம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து அங்கே சென்றனர். முதல் சந்திப்பிலேயே மாமா , மச்சி என ஆரம்பித்து, A ஜோக்ஸில் களைகட்டியது கச்சேரி. சபை கலைந்து படுப்பதற்கு சுமார் 1 மணி ஆனது.


வழக்கம் போல 6 மணிக்கு முழிப்பு தட்டியது. லுங்கியை சரி செய்துகொண்டு  எழுந்த கார்த்திக், அருகில் பார்த்தான். ஜெய் அடித்து போட்டவன் போல தூங்கிக் கொண்டிருக்க,  விக்னேஷ் விதவிதமான  கோலத்தில் S வடிவத்தில் சுருண்டு படுத்து கொண்டிருந்தான். பிரஷை எடுத்துக்கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றவனுக்கு ஹாஸ்டல் வாழ்க்கையின் முதல் அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது. கடைசியாக கஜினி முகமது காலத்துல கழுவினது போல் இருந்துது. பைப்பை திறந்தவனுக்கு இரண்டாவது அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது. தண்ணி என்ன காத்து  வருவதற்கான அறிகுறி கூட தென்படவில்லை. 

"அம்மா , பாத்ரூம்ல தண்ணி வரல, மோட்டார் கூட போட முடியாத உன்னால ?"

"வீட்ல சும்மாதான சுத்திட்டு இருக்க.. இந்த வேலைய கூட பண்ண முடியாதா? உனக்கெல்லாம் நேரம் வரும்போது தாண்டா அம்மாவோட அருமை தெரியும் ".

"அதெல்லாம் வரும்போது பாத்துக்கலாம்...மொதல்ல பாத்ரூம் கிளீன் பண்ணி வை".

ராஜா போல் வாழ்ந்த தன் வாழ்க்கை பறிபோனதை நினைத்து நொந்தான் கார்த்திக். "வாழ்கை ஒரு வட்டம் " என்ற தளபதியின் வரிகளில் உள்ள உண்மையை உணர்ந்தவனாய் மற்றொரு பாத்ரூமை  தேடிச் சென்றான். ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் தானும் சேர்ந்து கொண்டான். வெற்றிக்கதவை நெருங்கிய நேரத்தில், உள்ளே சென்றவன் வெளியேற தாமதம் ஆகியது.

"போதும் பாஸ்.. சீக்கிரம் வெளில வாங்க.. அர்ஜெண்டு" . பொறுமையிழந்த ஒருவன் கதவை தட்டினான்.

 "ஒரு 2 நிமிஷம் பொறுத்துகோங்க.. வந்துடறேன்" - பதில் வந்தது..

"என்னது பொறுத்துகிறதா , வள்ளுவர் மட்டும் இந்த லைன்ல நின்னு இருந்தார்னா பொறையுடைமை அதிகாரமே எழுதி இருக்க மாட்டார்." கார்த்திக் தனக்குள் புலம்பினான்.

"உள்ள இருக்கறவனுக்கு டைம் போறதே தெரியாது ..  வெளிய இருக்கறவனுக்கு தான் தெரியும் அது எவளோ ஸ்லோவா போகுதுன்னு" - மற்றொருவன் புலம்பினான்.

"எங்கயோ படிச்சு இருக்கோமே ?? அஹ்ஹ்ஹ ஐன்ஸ்டீன் , "தியரி ஆப்  ரிலேடிவிட்டி". ச்சே , இப்போ ஞாபகம் வருது... எக்சாம்ல கரெக்டா எழுதிருந்தா இந்நேரம் மெடிக்கல் சீட் வாங்கி இருக்கலாம்.. இப்படி வரிசைல நிக்கிற நிலைமை வந்து இருக்காது. " கார்த்திக்கின் சத்தமில்லாத புலம்பல்கள் தொடர்ந்தது.

இயற்கையும், இலக்கியமும், இயற்பியலும் சங்கமித்து கொண்டிருந்த வேளையில் கதவுகள் திறக்கப்பட்டன. புயலென உள்ளே நுழைந்தான் கார்த்திக். மற்றொரு ரூமில் தனக்கு வந்த  SMSக்கு விடை தேடிகொண்டிருந்தான் பாலசுப்ரமணி.

"Come like a horse, sit like a thief, Go like a Lion."

"மச்சி மணி  8 ஆச்சு , எந்திரிங்கடா , மொத நாளே கட் அடிக்கிற மாதிரி ஐடியாவா ?"  . தூங்கிகொண்டிருந்த ஜெய்யும், விக்னேஷும் எழுப்பிவிட்டு குளிக்கச் சென்றான் கார்த்திக். குளிச்சுட்டு வந்த gapல ரெண்டு பேரும் ரெடி ஆகி இருக்க "அடப்பாவிங்களா குளிசிங்களா இல்லையா?" என்று கலாய்த்தான் கார்த்திக். வாசலில் தாத்தா விசில் அடிக்க இவர்கள் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. இங்கே தாத்தா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இதற்கு மறு உருவம் தான் இந்த, தாத்தா என்று அழைக்கப்படும் வார்டன். டிவி ரிமோட்டை பதுக்குவது, நைட் ரூம்ல ரோல் கால் எடுக்கறது, போட்டு குடுத்து அப்பாலஜி லெட்டர் எழுத வைக்கிறது, கிளாஸ் ரூம்க்கு வரிசைல கூட்டிட்டு போய் விடறது, இது தான் இவரோட பிரதான வேலை. இந்தியன் தாத்தாவின் மறு அவதாரமாக நினைத்துகொள்ளும் இவரை சமாளிப்பது அவ்வளவு எளிதான விசயமே கிடையாது.


"என்னா ஜெய், காலேஜ் வந்தாலும் லைன்ல போ , வரிசையா போன்னு காண்ட கிளப்பிட்டு இருக்கானுங்க"

" விடு மச்சான்.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ... சீனியர் பிகர்ஸ் எல்லாம் சைட் அடிச்சுட்டே போய்டலாம் .." 

எறும்பு கூட்டம் போல் சீராக நேர் வரிசையில் இடதுபுறம்  சென்று கொண்டிருக்க, வலதுபுறத்தில் சீனியர் பெண்கள் சைக்கிளை மிதித்து கடந்து சென்றனர். 

"எவளோ மார்க் மச்சான் போடலாம் ? ஒரு 8 ?" - ஜெய்

" 8 ஜாஸ்தின்னு நினைக்கறேன், 6 ஓகே " - பாடத்தை தவிர வேற எந்த மார்க்கை பற்றியும் தெரியாத கார்த்திக் சமாளித்தான்.

"நான் அந்த மாதிரி பையன் கிடையாது, எங்க வீட்ல என்னைஅப்படி வளர்க்கவில்லை" என்பதை போல் பார்த்தான் விக்னேஷ்.

க்ளாஸ் ரூம் மெயின் பில்டிங் முதல்  மாடியில் இருந்தது. இருபுறமும் பெரிய கண்ணாடி ஜன்னல், நடுவே அவற்றை இணைக்கும் பாலம் போல ஒரு பச்சை போர்டு, ஒன்று சேர்த்து போடப்பட்டிருந்த மேஜை சகிதம் காட்சியளித்தது வகுப்பறை. தாமதமாய் சென்றதால் உட்கார இடம் இல்லாமல், கடைசி வரிசையில் பெண்களுக்கு பின்னால் சென்று மூவரும் அமர்ந்தனர்.


பெண்களை ஓரகண்ணால் நோட்டம் விட்ட கார்த்திக்கு  காலேஜ் வாழ்க்கையின் மூன்றாவது பெரிய அதிர்ச்சி , தான் எதிர்பார்த்த   ரேஞ்சுக்கு ஒருத்தி கூட இல்லை என்பது தான். 

"படிக்கிற பொண்ணுங்க எல்லாமே இப்படி தான் இருப்பாங்களோ ? அப்போ  கோயம்பத்தூர் பொண்ணுங்க அழகா இருப்பாங்கனு சபரி சொன்னது ? இவளுங்க குடுக்கற ரியாக்சன பார்த்த ஒருவேளை அவுங்களுக்கும் இதே பீலிங்க்ஸ் இருக்கும் போல இருக்கு" - மைன்ட் வாய்சில் பேசினான் கார்த்திக்.

வந்த இங்க்லீஷ் வாத்தியார் ஆதிகாலத்து சம்பிரதாயமான "introduce yourself "இல் ஆரம்பிக்க, ஒவ்வொருத்தனும் தன்னோட வரலாற்றை ஒப்பித்தனர். 60 பேர் அடங்கிய கிளாஸ்ல 3 பேர் மட்டுமே கோவையை சேர்ந்தவர்கள். அந்த மூனும் பசங்க.. 

"அதான் ஒரு பொண்ணும் நம்ம நெனைச்ச மாதிரி இல்ல".. தனக்குதானே ஆறுதல் சொல்லிகொண்டான் கார்த்திக்.

"ஐ ஆம் ஜெய்குமார் ப்ரம் சேலம் . ஐ ஸ்டடிடு இன் வனவாணி மெட்ரிக்   ஹையர் ஸ்கூல். பாதர் இஸ் எ பிசினெஸ்மேன். மதர் இஸ் ஹோம் மேகர்."

"நேத்து எதோ கிராமத்து பேர சொன்னான். இப்போ சேலம் னு சொல்றான்". - கார்த்திக்

"ஐ ஆம் விக்னேஷ் ப்ரம் திருநெல்வேலி . ஐ ஸ்டடிடு இன் பாபுஜி மெமோரியல் ஸ்கூல்...பாதர் இஸ் பார்மர்.. மதர் இஸ் ஹவுஸ் வைப்... " 

"யு டூ புருடஸ்.. என்ன இவனும் அவன மாதிரியே சொல்றான். எதுக்கு வம்பு .. பேசாம நம்மளும் மதுரனு சொல்லிடுவோம் ." 

"ஐ ஆம் .." சொல்லிக்கொண்டே எழுந்த கார்த்திகை இடைமறித்து அந்த குரல்.

"எஸ்கியூஸ்மீ சார், மே ஐ கெட் இன்? "

வெள்ளை சுடிதார், அதுக்கு மேட்சிங்கா வெள்ளை வாட்ச் , மெலிதான சில்வர் செயின், DIESEL சின்னம் பொறிக்கப்பட்ட பேக் வலது கையில், டிராப்ட்டர் இடது கையில் , அழகான முகத்தில் ஓடி வந்ததற்கான வியர்வை துளிகள், ஒரு மாடர்ன் தேவதையாக தெரிந்தாள் அவள். மொத்த கிளாசும் அவளையே நோக்கியது. பசங்க கண்ணுல பரவசம். பொண்ணுங்க கண்ணுல பொறாமை.

"சாரி சார்.. ப்ரின்சிபலை பார்த்துட்டு வர லேட் ஆயுடுச்சு .."

"இட்ஸ் ஓகே.. கெட் இன்".

"என்னோட பேரு ஜெஸ்ஸி"

 "ஜெஸ்ஸி" பேரை கேட்டதும் கார்த்திக்கின் மனதில் யாரோ கிடார் வாசிப்பதை உணர்ந்தான். அதுவும் சாதா கிடார் இல்ல Bass கிடார் !!
 
"நேடிவ் சென்னை. டாடி இஸ் சீனியர் மேனேஜர் இன் விப்ரோ. மம்மி இஸ் ஹவுஸ் வைப். சிஸ்டர் இஸ் ஸ்டடியிங் 12th . ஹாபீஸ் ஆர் ரீடிங் நாவல்ஸ், சிட்னி ஷெல்டன்".

கார்த்திக்கு எதுவுமே காதில் விழவில்லை. வேறொரு உலகத்துக்கு பயணித்து கொண்டிருந்தான். தன்னை சுற்றி அனைத்துமே ஸ்லோ மோசனில் நடந்து கொண்டிருக்க, Bass கிடாரின் அரவணைப்போடு,  சம்பந்தமே இல்லாத மலையாள இசை பின்னணியில் ஒலிக்க, கார்த்திக்கின் முன் வரிசையில் சென்று அமர்ந்தாள் ஜெஸ்ஸி.

இளையராஜாவும் , ஏ. ஆர். ரஹ்மானும் போட்டி போட்டுகொண்டு உச்சகட்ட ஸ்ருதியை அடைந்து கொண்டிருக்க, "next next " என்று தாளத்தோடு ஒட்டாமல் ஆங்கில வார்த்தைகள் ஒலிக்க தொடங்கியது.

 "மச்சான் , உன்ன தாண்டா , டேய் " - ஜெய் காலை மிதிக்க சுயநினைவு  திரும்பிய கார்த்திக்

"ஐ ஆம் மதுர ப்ரம் கார்த்திக்" என்று உளறி கொட்டினான். 

தவறை உணர்வத்துக்குள் வகுப்பறையில் அனைவரும் சிரித்துவிட, சற்றே எரிச்சல் அடைந்தாலும் ஜெஸ்ஸியின் சிரிப்பு அவனை பரவசமூட்டியது. காய்ந்து போய் பசுமையே இல்லாமல் போய்கொண்டிருந்த தன் வாழ்கையில் முதன் முறையாக தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தான் கார்த்திக்.

"என்னை அடிச்சது அந்த காதல். அப்படியே தலைகீழா புரட்டி போட்டுச்சு"

                                                                             ஆரோமலே...
                               
Technorati Tags : , , , , ,


Read more ...