டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
இதுவரை
6. Karthik talks to Jessi
இனி ..
கிளாஸ்ரூம் வெறிச்சோடி கிடந்தது... "பர்ஸ்ட் பீரியட் ப்ரீ போல .. ஒருத்தனும்
சொல்லலியே .. அப்போ கேன்டீன் தான் போய் இருப்பானுங்க .. எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்குவோம்..".. கிளாஸ் ரெப் பாலாஜிக்கு கால்
அடித்தான் ..
"எங்கடா இருக்கீங்க?"
"டேய் .. சீக்கிரம் டிபார்ட்மென்ட் செமினார் ஹால்க்கு வந்துடு.." -பாலாஜி
"எதுக்குடா ? போன வாரம் லேப் ப்ரோக்ராம்க்கு அவுட்புட் காட்டவா ?? "
"
அதுக்கு இன்னும் M.E ஸ்டாஃப் யாரையும் உஷார் பண்ணல.. இது HOD வர சொல்லி
இருக்காங்க .. என்ன மேட்டர்ன்னு தெரில"
"மச்சி பேசாம எனக்கு ப்ராக்ஸி போட்டுடு"
"டேய் .. ஏற்கனவே ஜெய்க்கு வேற போடணும் .. தாங்காது .. சீக்கிரம் வந்து சேரு .."
பின் கதவு வழியாக சென்று கடைசி வரிசையில் அமர்ந்தான் கார்த்தி. "செமஸ்டர் எக்ஸாம்ஸ் எல்லாரும் எப்படி பண்ணி இருந்தீங்க ?" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார் HOD.
விஷயம் விளங்கிவிட்டது. செமஸ்டர் ரிசல்ட்ஸ். "ஒருத்தரும் படிக்கணும், பாஸ் ஆகணும் அப்படிங்கிற எண்ணத்துல வர்ற மாதிரி தெரியல. "Data Structures"ல
பாதி க்ளாஸ் காலி. இந்த லட்சணத்துல I.V ஒண்ணுதான் உங்களுக்கு குறைச்சல். எல்லாரும் படிச்சு 80% மேல வாங்குங்க, அதுக்கு அப்பறம் I.V போறத பத்தி யோசிக்கலாம். "
தனது தலைமையில் நடக்கவிருந்த முதல் I.V கலைந்து போனதை எண்ணி ஷராஃபத் வருந்திக்கொண்டிருக்க, 90% வாங்கிய ரஞ்சனி 83% வாங்கியதற்காக திட்டு வாங்கிக்கொண்டிருக்க, கார்த்தி தான் பெயில் ஆனதை பற்றி கவலை கொள்ளாமல், ஜெஸ்ஸிக்கு ஸீக்ரெட் ஃப்ரென்ட் கிப்ட் தர முடியவில்லையேயென ஆதங்கப்பட்டுக்கொண்டான்.
HOD தொடர்ந்தார். "இனிமேல் எல்லாருக்கும் ஈவ்னிங் 4 - 6 டிபார்ட்மெண்ட் லேப்ல 'ஸ்டடி ஹவர்ஸ்'. படிச்சத குரூப் லீடர் கிட்ட ஒப்பிசுட்டு தான் கிளம்பணும். பாலாஜி, குரூப் லிஸ்ட் ரெடி பண்ணி என்னோட டெஸ்க்ல வச்சுடு. பசங்களுக்கு பொண்ணுங்களையும் பொண்ணுங்களுக்கு பசங்களையும் லீடரா போடு .. அப்போதான் ஏமாத்தமா ஒழுக்கமா படிப்பீங்க .. " .
பாலாஜி வழக்கம் போல ரோல் நம்பர் வரிசையில் குரூப் பிரிக்க, இம்முறையும் ஜெஸ்ஸி தலைமையிலான குரூப்பில் கார்த்தி அண்ட் ஜெய்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
கடமையே என்று சிலர் , படிக்கும் சாக்கில் கடலையென சிலர் , வேண்டா வெறுப்பாக பலர் என்று சர்க்யூட் லேபில் க்ரூப் ஸ்டடி ஆரம்பம் ஆனது.
"ஜெஸ்ஸி நல்லா புரியர மாதிரி சூப்பரா சொல்லித்தரா இல்ல .. மேடம் நடத்தும் போது ஒரு எழவும் விளங்கல"
"எப்படிடா விளங்கும் .. பாடத்த கவனிச்சாதான .. பாக்கறது பூரா அவள .. " - ஜெய் அலுத்துக்கொண்டான்.
"தம்பி, நீங்க மேடம பாக்கறதுக்கு நாங்க பாக்கறது எவளவோ தேவல"
"என்ன சொல்றாரு உங்க ல்ப லீடர்" - ஜெஸ்ஸி.
"நீ அவனைவிட நல்லா சொல்லித்தறியாம். தலைவர் சொல்றாரு" - நக்கலாய் சிரித்தான் கார்த்தி.
"அவரு பெரிய படிப்ஸ். படிக்காமலேயே பாஸ் பண்றவர். அதுவும் அவர்
Tunneling சொல்லிகொடுத்த மாதிரியெல்லாம் எனக்கு நடத்தவே தெரியாது. அவரு முன்னாடியெல்லாம் நான் சும்மா". சொல்லிவிட்டு அவளும் சிரித்தாள்.
அவள் சிரிப்பில் ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணர்ந்தான் கார்த்தி. ஜெய்யோ கார்த்தி போடும் கடலை கருகாமல் இருப்பதற்குத் தன்னை மணலாக உபயோகிப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்தான்.
"இப்படி படிக்காம பேசிட்டே இருந்த இந்த தடவையும் நீ பாஸ் ஆக மாட்ட கார்த்தி."
"பார்த்துட்டே இரு ஜெஸ்ஸி .. இந்த தடவ ஃபர்ஸ்ட் மார்க் வாங்கறேனா இல்லையானு."
அதை கேட்டவுடன் ஜெய்க்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது .. ஜெஸ்ஸியும் உடன் சேர்ந்து சிரித்தாள்.
"என்ன மச்சான் இப்படி சிரிச்சு அசிங்கப்படுத்துற .. சிங்கள் பாஸ் அஸெம்ப்லர் ஒப்பிக்கவா ? பாக்கறியா ?"
"உனக்கு எவளோ சொல்லிக் கொடுத்தாலும் புரியாதுங்கற விஷயம் தெரிஞ்சும் அவ வெட்கமே இல்லாம சிரிக்கிறா. இதுல ஸார் ஃபர்ஸ்ட் மார்க் வேற வாங்க போறீங்க .. ஆல் தி பெஸ்ட்."
ஜெஸ்ஸியை இம்ப்ரெஸ் செய்வதற்கு இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. அதற்காகவே வெறித்தனமாக படித்தான் கார்த்தி. அனைவரும் எதிர்பார்த்தது போல் பாஸ் மட்டுமே ஆக முடிந்தது. தியரீ ஆஃப் கம்ப்யூடேசன் உட்பட 4 சப்ஜக்டில் பார்டர் பாஸ். ஜெஸ்ஸியின் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்தது.. முதலாவது மார்க் சாட்சாத் ஜெய். இட் வாஸ் எ மெடிகல் மிராக்கிள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
"பாஸ் ஆயிட்டோம்ல" - மெஸேஜ் தட்டினான்.
"ஹேய் .. சூப்பர் .. வாழ்த்துக்கள். ஃபர்ஸ்ட் மார்க் வாங்கறதா சொன்னீங்க?".
"இப்போ தான பாஸ் ஆக ஆரம்பிச்சு இருக்கோம். அடுத்த ஸெமெஸ்டர்ல வாங்கிடுவோம்"
"ஹி ஹி ஹி ... அது சரி .. பாஸ் ஆனதுக்கு ட்ரீட்?"
"குடுத்துட்டா போச்சு .. நாளைக்கு .. ஆல் சீசன்ஸ் .. 12.30 ஷார்ப்.. வந்துடு" .. ரீசார்ஜ் செய்தது போக ஜெய்க்கு தரவேண்டிய மீதம் 100 ரூபாய்யை பர்சில் பத்திரப்படுத்தினான்.
ட்ரீட் குடுக்கற மேட்டர சொன்னா ரொம்ப கலாய்பானுங்க. இவனுங்களையும் கூட்டிட்டு போலாம்னு பார்த்தா காசும் இல்ல. அப்படியே இருந்தாலும் அங்க வந்து நம்மள ப்ரீயா பேச விட மாட்டானுங்க. இத்தகைய சிந்தைனைகள் தோன்ற சீக்கிரமா எழும்பி கிளம்பினான். காதல் வந்தால் அனைத்தும் தலைகீழ் தான்.11 மணிக்கு கல்லூரிக்குப் போகும் கார்த்தி இன்றோ 12.15 மணிக்கெல்லாம் ஆல் சீசன்ஸ் வாசலில்.காத்திருந்த காலம் எல்லாம் செல்போன் வருகைக்கு பின்னர் காணாமல் போனது. "wru" மெஸேஜ் பறந்தது. 5 நிமிடத்தில் ஜெஸ்ஸியும் வந்து சேர்ந்தாள்.
ஆல் சீசன்ஸ் காஸ்ட்லீ ஹோட்டல் என்பதால் கூட்டம் ஜாஸ்தி இருப்பதில்லை. ட்ரீட் கொடுக்க வரும் கும்பல் தான் சற்று அதிகம். ஒரு இடம் தேடி அமர்ந்தார்கள்.
"எனக்கு என்ன கார்த்தி வாங்கி தர?"
"என்கிட்ட இருக்கற 100 ரூபாய்க்கு 2 மீல்ஸ் தான் சாப்பிட முடியும்"
"ஹி ஹி .. ஹ்யூமரஸ் .. இது தான் உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு"
"அப்படியா.. அப்போ அந்த 100 ரூபாய்யும் என்னோடது இல்ல. ஜெய்யோடது"
"ஹி ஹி ஹி ஹி .. வெரி funny .."
கார்த்தி அடித்த மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரித்தாள். அவள் உண்மையாகவே ரசிக்கிறாளா அல்லது நடிக்கிறாளா .. புரிந்துகொள்ள முயற்சி செய்வது வீண் வேலையென்று தோன்றியது. இதே ஜோக்கை ஒருமுறை ஜெய்யிடம் சொல்லி அடி வாங்கியது நினைவில் வந்து மறைந்தது.
சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து பேசிக்கொண்டிருக்கையில் செல்போன் ஒலித்தது.
ஜெய் காலிங்க்.
"சொல்றா"
"எங்க மச்சான் இருக்க?"
கழுகுக்கு மூக்கு அதுக்குள்ளயும் வேர்த்துடுச்சு. "RS புறம்ல." ஜெஸ்ஸிக்கு கேட்காதவறு. வெங்கடாபுரத்தில் இருந்துகொண்டு.
"அப்படியா. அங்கயே இரு. நாங்களும் அங்க தான் வர்றோம். போர் போர்ன் ஐஸ் க்ரீம் கூப்பன் ஓசி கிடைச்சு இருக்கு"
"இல்ல மச்சான். நான் அங்க இருந்து சாய்பாபா காலனி கிட்ட வந்துட்டேன். SBI ATM கிட்ட இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்க." சமாளித்தான்.
"அப்படியா. நாங்களும் அங்க தான் இருக்கோம். கொஞ்சம் ரோட்டுக்கு இந்த பக்கம் பாரு. "
ஜெய்யும் விக்கியும் நக்கலாய் சிரித்து கொண்டிருந்தார்கள். கையும் களவுமாக மாட்டிக்கொண்டதை எண்ணி கூச்சப்பட்டான் கார்த்தி.
"சரி சரி .. வழியாத .. நீ நடத்து" .. போனை கட் செய்தான்.
"பாசமா விட்டுட்டு போறான். நல்லததுக்கா கெட்டதுக்கான்னு தெரியலயே. சமாளிப்போம்".
-------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னடா நடக்குது உங்களுக்குள்ள".. சாயங்காலம் ஹாஸ்டலில் தூண்டில் போட்டான் ஜெய்.
"ஒன்னும் இல்ல மச்சி .. பாஸ் ஆனதுக்கு ட்ரீட் கேட்டா .. கொடுத்தேன் .. அவளோதான். "
"ஏன்டா !@#$. எக்ஸாம்க்கு முன்னாடி படிச்சு கதை சொன்னது நானு. ட்ரீட் மட்டும் அவளுக்கா .. !@#!@$!@$@!"
"விட்றா விட்றா .. ட்ரீட் தான வச்சுட்டா போச்சு"
அடுத்த மாதம் திருப்பி தருவதாய் கூறி ஜெய் செலவில் அன்று இரவே சரக்கு ட்ரீட் ஏற்பாடு செய்தான். சில பல ரவுண்டுகள் உள்ளே சென்றதில் "மச்சி .. உனக்கு அவள எவ்வளோ புடிக்கும்" என்று ஜெய் கேட்க போதையில் அவனும் "இவ்வளோளோளோளோளோ" என்று உளறி மாட்டிக்கொண்டான்.
"அதான் புடிச்சு இருக்குல. போய் சொல்ல வேண்டிதான"
"லவ் எல்லாம் இல்லடா .. வெறும் நட்பு மட்டும் தான்". ஆனா வேலை கிடைச்ச உடனே சொல்லிடுவேன் மச்சி என்று மனதிற்குள் கூறிக்கொண்டான்.
அன்றிலிருந்து அவள் வரும்போதெல்லாம் இதை சொல்லி கிண்டல் செய்வது வழக்கமான ஒன்றானது. இவ்வாறாக ஜாலியாக போய்க்கொண்டிருந்த ஸ்டடி ஹவர்சில் எவனோ ஒரு !@#!$! 1.5GB RAM ஆசைப்பட்டு திருடியதில், "நீங்க படிச்சு கிழிச்சது போதும்" என்று ஸ்டடி ஹவர்ஸ் முடிவுக்கு வந்தது. இந்த செய்தி கார்த்தி மட்டுமல்லாது ஸ்டடி ஹவர்சில் கடலை வருத்த பலருக்கும் வருத்தத்தை தந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஜெஸ்ஸிக்கு முதல் கம்பெனியிலேயே வேலை கிடைத்தது. கார்த்தி முதலில் வந்த ஓரிரண்டு கம்பெனிகளை தவறவிட்டாலும் ஒருவழியாக முட்டிமோதி மூன்றாவதில் வேலை கிடைத்தது. வேலையில்லாத சமயங்களில் ஜெஸ்ஸி மிகவும் ஆறுதல் கூறி தெம்பு ஊட்டினாள். உற்சாகப்படுத்தினாள். அவர்களுக்குள் இருந்த நெருக்கம் இன்னும் அதிகமானது. காதலை சொல்ல தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அடுத்த வாரத்தில் ஜெஸ்ஸியின் பிறந்தநாள் வருவது நினைவில் வந்தது. காதலை பரிசாக கொடுக்க இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது.
காத்திருந்த நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. 11.30. அரை மணி நேர காத்திருப்பு. காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து காத்திருத்தல் சுகமான ஒன்றாகவே தெரிந்தது. கவித்துவமாக காதலை சொல்லி ஆச்சரியப்படுத்த வேண்டும். மூளையை கசக்கி எழுதிக்கொண்டிருக்கையில் செல்போன் அழைத்தது - "JAI DAD CALLING". சுவாரசியமாக பக்கத்து ரூமில் மொக்கை போட்டுக்கொண்டிருந்த அவனிடம் கொடுத்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து எழுத்த ஆரம்பித்தான்.
எழுதி முடிக்கையில் மணி 12.05 கடந்திருந்தது. போன் செய்து விஷயத்தை சொல்ல வெட்கமாக இருந்தது. மெஸேஜ் தான் சிறந்தது என்று முடிவு செய்து பக்கத்து ரூமிலிருந்த ஜெய்யிடம் போனை வாங்கி வந்து பொறுமையாக டைப் அடித்தான். ஒரு வேலை ஃபார்வர்ட் மெஸேஜ்ன்னு நெனச்சு டெலீட் பண்ணிட்டா என்ன பண்றது ? யோசித்தான். கவிதையை நாளை நேரில் வாசித்து அசத்திவிடலாம். இப்போதைக்கு அளவாக "I love you" மட்டும் அனுப்பினான். ஒரு பதிலும் இல்லை. போன் பண்ணலாம் என்றால் வெட்கம் இடைமறித்து.
உதிக்கின்ற சூரியன் உறங்கும் வேலையில், உங்கள் இல்லம் தேடி வரும் இனிய இரவு வணக்கங்களுடன் நான் உங்கள் லக்ஷ்மி நாராயணன். சூரியன் F.M இல் அடுத்து வரும் பாடல் இசைஞானி இளையராஜா மெல்லிசையில் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா"
எப்படியும் பதில் வரும் என்னும் நம்பிக்கையில் இளையராஜா இசையோடு தூங்கிப்போனான்.